பெற்றோரை இழந்து தவிக்கும் லண்டன் குழந்தைகளுக்கு நிதி மட்டுமல்லாது பிற தேவைகளையும் அறிந்து உதவி செய்யப்படும் என டாடா சேர்மன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் அர்ஜுன் (27), கேன்சரால் மறைந்த தனது மனைவி பாரதியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தார். பின் லண்டன் புறப்பட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தம்பதியின் 4 & 8 வயதுடைய குழந்தைகள் லண்டனில் தவிக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்யப்படும் என டாடா சேர்மன் தெரிவித்துள்ளார்.