திடீரென சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

68பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில், வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. சிர்சி நகரில் இருந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கில் சாலையில் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக சாலையில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், ஹெலிகாப்டர் மீது சாலையில் சென்ற கார் மோதியதில் சேதம் ஏற்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி