தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டரான ஹென்ரிச் கிளாசென், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடியது தன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. இந்த ஓய்வு முடிவை எடுப்பது கடினமானதாக இருந்தது என கிளாசென் கூறியுள்ளார். கிளாசென் 60 ஒருநாள் போட்டிகளில் 2141 ரன்களும், 58 டி20-க்களில் 1,000 ரன்களும் எடுத்துள்ளார். 33 வயதே ஆகும் கிளாசெனின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.