பாகிஸ்தானில் கனமழை - 87 பேர் பலி

50பார்த்தது
பாகிஸ்தானில் கனமழை - 87 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை பேரழிவை உருவாக்கியுள்ளது. வீடு இடிந்து விழுந்து, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 82 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மழை காரணமாக 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழையால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி