சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், வடதமிழகத்தை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்ட பகுதிகளிலும் இன்று கனமழை தொடரும். தமிழ்நாட்டில் ஏப்.22 வரை ஆங்காங்கே மிதமான மழை தொடரும். நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.