4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தயார் நிலையில் இருக்குமாறு 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.