தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.05) இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.