11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

59பார்த்தது
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 9) 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி