சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு 4 நாட்கள் கனமழை அலர்ட் விடுத்துள்ளது. ஜூன்.10 கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கும் ஜூன்.11 திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன்.12 வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி மாவட்டங்களுக்கும் ஜூன்.13 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.