தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலர்ட்

55பார்த்தது
தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலர்ட்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ம் தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிச.24,25-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று (டிச.22) முதல் டிச.28 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி