தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

84பார்த்தது
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.,5) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி