தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்

75பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக வேலூரில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, நெல்லை பாளையங்கோட்டை, கடலூர் பரங்கிப்பேட்டை, தஞ்சை, திருச்சி, திருத்தணியிலும் வெயில் சதம் அடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி