குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருக்கும், மகேந்திர ஷா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில், வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள், கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு மொத்தமாக ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.