சீமை சுரைக்காய் எனப்படும் செள செள நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி ஆகும். இது அதிக நார்ச்சத்து கொண்டுள்ளதால் இதய நோயைத் தவிர்க்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். செள செள நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, ஆய்வு ஒன்றில் இந்த காயை சாப்பிட்டவர்களின் ரத்த சர்க்கரை அளவு கணிசமான அளவில் குறைவதாக கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை இது தடுக்கும் என கூறப்படுகிறது.