சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் 1921 ஜூலை 27ஆம் தேதி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாய்களுக்கு சோதனை செய்யப்பட்டு இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பின்னர் முதன்முதலில் நீரிழிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயதுச் சிறுவனுக்கு செலுத்தப்பட்டது. இன்சுலினை கண்டுபிடித்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங் தான் அவனுக்கு செலுத்தினார். இதில் சிறுவனுக்கு நீரிழிவு கட்டுப்பட்டது.