அவர் கூட போனியே.. பாமக பாலுவை விமர்சித்து பாடிய வழக்கறிஞர் கோபு

56பார்த்தது
பாமக சமூக நீதி பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கோபு, முன்னாள் தலைவர் பாலுவை விமர்சிக்கும் வகையில் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவும் மோதலின் காரணமாக, ராமதாஸ் தனது ஆதரவாளர்களை முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாலுவை நீக்கி, கோபுவை சமூக நீதி பேரவை தலைவராக நியமித்தார். இந்நிலையில், புதிய தலைவர் கோபு பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி