சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் எஃப்.ஐ.ஆர். தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், "நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என குற்றவாளி மிரட்டினான். எனது தந்தையின் எண்ணை எடுத்து மிரட்டியதோடு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்தான்" என குறிப்பிடப்பட்டுள்ளது.