நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சாணிக் காயிதம்'. ஆக்சன் ரிவெஞ்ச் படமான அதில் கீர்த்தி சுரேஷ், தனது கணவரை கொன்றவர்களை துடிதுடிக்க கொலை செய்து நடுங்க செய்திருப்பார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள கீர்த்தி சுரேஷ், அந்தப்படத்தை பார்த்து பயந்து கொண்டு, 10 நாள்கள் வரை தனது கணவர் ஆண்டனி அருகில் வரவில்லை எனக் கூறியுள்ளார்.