கர்நாடகா: பெங்களூருவைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்குத் தாயான ஹரிணி (36) என்ற பெண்ணுக்கும் யஷாஷ் (25) என்ற இளைஞருக்கும் 2 வருடங்களாகத் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் கெங்கேரி பூர்ண பிரஜ்னா லேஅவுட்டில் உள்ள OYO ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது ஹரிணி தன்னைவிட்டு விலகிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யஷாஷ், ஹரிணியை கத்தியால் 17 முறை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.