புளூஃபின் டுனா உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்டு ஏலத்தில் இந்த மீன் 114.24 மில்லியன் யென் (ரூ. 6.5 கோடி) ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த ஏலத்தில் புளூஃபின் டுனா மீன்களின் விலை மும்மடங்காக உயர்ந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த மீனின் எடை 238 கிலோ ஆகும். அமோரி மாகாணத்தில் உள்ள ஓமா பகுதியில் பிடிபட்டதாக கூறப்படுகிறது.