இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார். ஹர்திக் பந்துவீச்சு ஃபார்மில் இருப்பதுதான் அணியின் வெற்றிக்கு முக்கியமாகும் என்றார். அவரது பந்துவீச்சு சரியாக இருந்தால் குல்தீப் விளையாட முடியும் என்று விளக்கமளித்தார். ஹர்திக்கின் லெந்த் பந்துகள் மேற்கிந்திய தீவுகளின் உலர் ஆடுகளங்களுக்கு ஏற்றது. அவர் பவுன்சர்கள், கட்டர்களை வீசினால், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அது மிகவும் கடினமாக இருக்கும். எப்படியும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்' என்றார்.