ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

62பார்த்தது
ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று (மார்ச் 29) மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் 3 முறை இதே தவறை செய்ததால் ஒரு போட்டியில் விளையாட தடை பெற்ற ஹர்திக் பாண்ட்யா, நடப்பு சீசனில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதே தவறுக்காக மீண்டும் தண்டனை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி