நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரத்தில் ஒரே கல்லிலால் ஆன சிலையில் சாந்த சொரூபினியாக பக்தர்களுக்கு அனுமன் அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்திக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதற்காக உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.