கடவுள் ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். இதன் காரணமாகவே கருடனுக்கு அடுத்தபடியாக அனுமனை தனது வாகனமாக மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார். பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் தனிச் சன்னதி அல்லது பெருமாளுக்கு எதிரில் சன்னதி கொண்டு அருள் பாலிப்பார். ஆனால் அனுமனுக்கென்று தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இறைவனுக்கு அவர் செய்த தன்னலமற்ற இறை சேவையும், அவரது தியாகமும் தான் இதற்கு காரணம்.