கர்ப்பிணி பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

579பார்த்தது
கர்ப்பிணி பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விருதாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில், கஸ்தூரியின் வயிற்றில் இருந்து ஏழு மாத ஆண் குழந்தையின் சடலமும் எடுக்கப்பட்டது. ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் தாமதமாக கர்ப்பிணி பெண் கண்டெடுக்கப்பட்டதால் அவரை சரியான இடத்தில் காப்பாற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி