இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் முறியடித்தது. இந்த வரிசையில் ஹமாஸ் அலுவலகம் இஸ்ரேலியப் படைகளால் இடித்துத் தள்ளப்பட்டது. மறுபுறம், காசா பகுதி மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. இரு குழுக்கள் இடையில் இடம்பெற்று வரும் தாக்குதல் மற்றும் எதிர் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.