புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை (ஜூன் 16) மாலை ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் உரையாடவுள்ளார். இதனால் புதுச்சேரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.