இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தளப் பக்கத்தில், "52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் உறுதி செய்யப்படாததால் அவர்களின் பயணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் யாத்ரீகர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.