பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மகள் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் எனது மூத்த மகள் சிவரஞ்சனி, சமஸ்கிருத துறையில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் (மகளைச்) சான்றோன் எனக்கேட்ட தாய் (தந்தை)" என பதிவிட்டுள்ளார்.