தமிழ்நாட்டை சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.