சுமார் ரூ.32,000 கோடிக்கு மேல் Infosys நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Infosys, 2017-2022 காலக்கட்டத்தில் ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த வரி ஏய்ப்பு ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.