இந்தியாவில் தொடர்ந்து 2 ஆவது முறையாக கடந்த மாதமும் ஜிஎஸ்டி.வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியதாக மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.37 லட்சம் கோடி வரி வசூல் செய்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயிலாக ரூ.1.50 லட்சம் கோடி, இறக்குமதி மூலம் ரூ.51,266 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 16.4% அதிகமாகும்.