பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள்!

164பார்த்தது
பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள்!
2035 ஆம் ஆண்டிற்குள் முக்கியத் துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையங்களை நிறுவுவதற்கு இந்தியா காலக்கெடு விதித்து உள்ளது. உலகிலேயே அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு அளவினை நிகரச் சுழியமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கானது 2030 ஆம் ஆண்டில் 60% ஆகவும், 2047 ஆம் ஆண்டில் 90% ஆகவும் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் நாட்டின் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி