2023 உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்குச் சரிந்தது. சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்
ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 97 ரன்களும், விராட் கோலி 85 ரன்களும் விளாசினர்.