தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் சூர்யா ‘அகரம்’ என்னும் அறக்கட்டளையை 2006ம் ஆண்டு தொடங்கினார். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக பல ஏழைக் குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைத்து வருகிறார். இதன் நோக்கம், அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தரமான கல்வியை சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அறக்கட்டளையில் சூர்யாவின் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்திக்கும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.