தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 10 வயதான பேத்தியை பலாத்காரம் செய்ததாக 72 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோரை பிரிந்த சிறுமி, தனது தாத்தா-பாட்டி கண்காணிப்பில் வளர்ந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது பேத்தியை தாத்தா பலாத்காரம் செய்துள்ளார். இதனை, பாட்டி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தாத்தா கைது செய்யப்பட்டார்.