கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அரசுப்பள்ளி ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் பகுதியில் ஆசிரியை பத்மா (54) என்பவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவ இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.