திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தாக் கட்டணங்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு கர்நாடகா ஃபிலிம் சேம்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைவர் என்.எம்.சுரேஷ் கூறுகையில், ஏற்கனவே பல சவால்களை சந்தித்து வரும் திரைத்துறைக்கு இது பேரிழப்பு. மாநிலம் முழுவதும் 637 திரையரங்குகள் உள்ளதாகவும், அவற்றில் 130 திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுடன் மீண்டும் விவாதிப்போம் என கூறினார்.