2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி!

54600பார்த்தது
2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி!
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ஜுன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும். தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ.120 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி