மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியரை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ டவுன் டெக்னிக்கல் பில்டிங்கில் உள்ள தொழில்நுட்பக் கல்வித் துறையில் அமித் சர்க்கார் என்ற ஊழியர் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விடுமுறை தொடர்பாக அலுவலகத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அமித் நான்கு சக ஊழியர்களைக் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.