3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்திய அரசு மருத்துவர்கள்

64பார்த்தது
3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்திய அரசு மருத்துவர்கள்
கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகன் ரிஷ்வந்த். பிறவியிலேயே தசை பிளவு பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். முதல் கட்டமாக சிதைவு ஏற்பட்ட வலதுகால் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அதிநவீன தரத்துடன் கார்பன் பைபர் பாதம் மற்றும் கால் முட்டி மூலமாக செய்யப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி