திருவண்ணாமலை: போளூரில் மகளிர் இலவச பேருந்தில் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் அளித்த விளக்கத்தில், "தனியார் பேருந்துடன் அரசு பேருந்து மோதிய விபத்தில் கண்ணாடி உடைந்தது. உடனடியாக பயணிகளை இறக்கிவிட்டு கண்ணாடியை மாற்றுவதற்காக செய்யாறு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.