கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்னும் பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அப்போது, திடீரென அந்த பேருந்து தானாக நகர்ந்து சென்று, எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த முதியவர் நூலிழையில் உயிர் தப்பினார். பேருந்தில், ஹேண்ட் பிரேக் போடாததாலும், தாழ்வான பகுதி என்பதாலும் அந்த பேருந்து நகர்ந்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.