கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே சாலையில் சென்ற அரசுப் பேருந்து ஒன்று திடீரென சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. போச்சம்பள்ளி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக பேருந்தில் இருந்த 15 பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து ஓட்டுநரிம் விசாரணை நடத்தினர்.