தென்காசி அருகே அரசுப் பேருந்து வயலில் இறங்கிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து இடைகால் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் விஜயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.