அரசுப் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 5,786 இடைநிலை ஆசிரியர், 2000 முதல்நிலை பட்டதாரி ஆசிரியர், 2,600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும், இந்த மாதம் இறுதிக்குள் 3,000 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பணி நியமனம் வழங்குவார் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.