ஐஐடி இயக்குநர் காமகோடியின் கோமியம் குறித்தான கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஐஐடி இயக்குநர் காமகோடி ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டை சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.