தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் ரூ.1160 உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த வாரத்தின் முதல் நாளான ஜூன்.30 அன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.8,915-க்கும், சவரன் ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் தொடர் ஏற்றம் கண்டது. இன்று, தங்கம் ஒரு கிராம் ரூ.9,060-க்கும், சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது. அதாவது, ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது.