சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 14) காலை சவரன் ரூ.65,840-க்கு விற்பனையான நிலையில், மாலையில் ரூ.560 உயர்ந்து ரூ.66,400-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 15) சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.8,220க்கு விற்பனையாகிறது.