தங்க நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து எம்பி சு.வெங்கடேசன் விரிவான விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று. இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்" என்று தெரிவித்துள்ளார்